வீட்டு உரிமையாளருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் உல்லாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டிய வீட்டின் வேலைக்காரி சித்திரவள்ளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூரில் புதிய கடற்கரை சாலையில் மனோஜ் குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் சித்திர வள்ளி என்ற பெண் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில், மனோஜ்குமாரின் மனைவி, குழந்தைகளுடன் 10 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது மனோஜ்குமாருக்கும், சித்திரவள்ளிக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவரும், உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சித்திரவள்ளியைத் தேடி அவரது உறவினர் ஜீவானந்தம் என்பவர், மனோஜ்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனோஜ், சித்திரவள்ளி நெருக்கமாக இருப்பதை அறிந்து கொண்டு, மனோஜ்குமாரை மிரட்டி 20000 ரூபாய் பணம் மற்றும் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஜீவா பெற்றுக்கொண்டு சித்திரவள்ளியையும் அழைத்துச் சென்றுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை, மனோஜ்குமாரை, சித்திரவள்ளி, போனில் தொடர்புகொண்டு, உடனடியாக 1 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், மனோஜ் குமார் தன்னிடம் பணம் இல்லை என மறுத்துள்ளார். இதனையடுத்து இருவரும் உல்லாசமாக இருந்ததை தான் வீடியோ எடுத்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் உல்லாசமாக இருக்கும் வீடியோவை வாட்ஸ் ஆப் , ஃ பேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவதாகவும் வேலைக்காரி சித்திரவள்ளி மிரட்டியுள்ளார்.

அப்போதுதான், வேலைக்காரி சித்திரவள்ளிக்கும் இந்த பணம் பறிப்பில் தொடர்பிருப்பது மனோஜ்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால், அதிர்ந்து போன வீட்டின் ஓனர் மனோஜ்குமார், திருவான்மியூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சித்திரவள்ளியைத் தேடிவருகின்றனர். மேலும் அவர் இதற்க்கு முன்பாக இப்படி ஏதாவது செய்து பணம் பறித்துள்ளாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.