சேலத்தில் கேரள இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ ஓட்டுநர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். பீனாவின் கணவர் 5 வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார்.  

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு இடையூறு... பெற்ற மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற காமவெறி பிடித்த தாய்..!

இதனையடுத்து, குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் நகைக்காக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

இந்நிலையில், நேற்று பீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில், அப்பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 19, 20 வயது வாலிபர்கள் இந்த கொலையில்  சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.