26 வயது இளைஞர் ஒருவரை மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூரு கே.பி அக்ரஹாரா பகுதியில் இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது. 26 வயது இளைஞர் ஒருவரை மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் ஒரு இளைஞரை கொடூரமாக கொன்றுள்ளனர். இளைஞர் மீது கல்லை தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாக தெரிகிறது.

இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர். இது பற்றி உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இருப்பினும் வரும் வழியிலேயே இளைஞர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாதாமி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க..தமிழகத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது.. ஓங்கி அடிக்கும் சீமான் !!

கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த கொடூரமான கொலையின் சிசிடிவி காட்சிகள் இப்போது வெளிவந்துள்ளன. அதில் சுமார் 20 முறை கல்லால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! பரபரப்பு சம்பவம்.!
