Asianet News TamilAsianet News Tamil

சரக்கு போட்டுட்டு ஒருமையில் திட்டியதால் பைனான்ஸ் ஊழியரை கொன்றோம்... நண்பர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.!

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகே முட்புதறில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். 

friends hacked to finance employee murder in viluppuram
Author
First Published Aug 24, 2022, 2:06 PM IST

பைனான்ஸ் ஊழியர் ஒருமையில் திட்டியதால் குடிபோதையில் நண்பர்களே சேர்ந்து வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சவரிமுத்து மகன் மரியபிரபாகரன் (32). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில்வே மருத்துவமனை அருகே முட்புதறில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். 

இதையும் படிங்க;- கூலிப்படை ஏவி காதல் கணவர் கொலை.. நாடகமாடிய மனைவியின் குட்டு அம்பலம்.. வெளியான பரபரப்பு தகவல்..!

friends hacked to finance employee murder in viluppuram

அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மரிய பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது. பாலா என்கிற பாலமணி (23), ரவி மகன் குகன் (24), வல்லரசு (22) ஆகியோர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

friends hacked to finance employee murder in viluppuram

இதனையடுத்து, 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் வெளியூருக்கு தப்பிச் செல்ல விழுப்புரத்தில் பதுங்கியிருந்த பாலா என்கிற பாலமணி, குகன், வல்லரசு ஆகியோரை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட மரியபிரபாகரன், தனது வேலை விஷயமாக பணம் வசூலிக்க செல்லும் இடமெல்லாம் நண்பர்களான பாலா உள்ளிட்ட 3 பேரையும் உடன் அழைத்து செல்வார். அதோடு 4 பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது போதை தலைக்கேறியதும் மரியபிரபாகரன் 3 பேரையும் ஒருமையில் திட்டுவதை வழக்கமாக கொண்டதால் ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- யாரையும் சும்மா விடாதீங்க! தற்கொலை செய்த கோவை மாணவி வழக்கு! 9 மாதங்களுக்கு பிறகு 2 முதியவர்கள் போக்சோவில் கைது

Follow Us:
Download App:
  • android
  • ios