போலி ஆதார்.. போலி பாஸ்போர்ட்.! இந்தியாவில் அடுத்தடுத்து கைது - பரபரப்பு பின்னணி
ஆக்ராவில் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறிய 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலி ஆதார் அட்டைகள், செல்போன்கள், ரயில் டிக்கெட்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச காவல்துறையினரால் ஆக்ரா நகரில் தீவிர தேடுதலுக்குப் பிறகு இரண்டு பெண்கள் உட்பட ஐந்து வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஐந்து சட்டவிரோத குடியேற்றவாசிகளும் தானா தாஜ்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தனர்.
அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் இருந்தனர். அஜிசுல் காசி என்ற நபர் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்ததும், பிடிபட்ட பிறகு, காசியும் அவரது மனைவி ஜன்னத்தும் பணத்திற்கு ஈடாக அவர்களை எல்லையைத் தாண்டிச் செல்வதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டது தெரியவந்தது.
இதையும் படிங்க..‘காம வெறி’ நாயை கூட விட்டு வைக்காத வெறிபிடித்த சைக்கோ - வைரல் வீடியோ சர்ச்சை
அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள், செல்போன்கள், ரயில் டிக்கெட்டுகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன. ஜன்னத் பேகத்திடம் இருந்து பாஸ்போர்ட்டும் மீட்கப்பட்டுள்ளது. இந்த காவல்துறை நடவடிக்கை காவல்துறை ஆணையர் ப்ரீத்திந்தர் சிங்கின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?