மக்களே உஷார்! எப்படி எப்படி எல்லாம் பண மோசடி செய்யறாங்க.. ஸ்கெட்ச் போட்டு நைஜீரிய வாலிபர்களை தூக்கிய போலீஸ்.!

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வழியாக அறிமுகமில்லாத நபர்களுடன் பழகி பின்னர் அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பண மோசடியில்  ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 2 நைஜீரியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Financial fraud... Two Nigerians among 3 held Arrest

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வழியாக அறிமுகமில்லாத நபர்களுடன் பழகி பின்னர் அவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பண மோசடியில்  ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 2 நைஜீரியர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சமூக வலைதளங்கள் மூலமாக பழகி பரிசு பொருட்களை அனுப்புவதாக கூறி விட்டு, பின்னர் குறிப்பிட்ட பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன என்று கூறி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. 

இதையும் படிங்க;- பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி டொக்கன் ராஜா ஓட ஒட வெட்டி படுகொலை.. 20 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி..!

இதுபோன்ற மோசடிக் கும்பலை சேர்ந்தவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. பார்சலை அனுப்பி வைத்து விட்டு அதில் இருக்கும் சட்டவிரோத பொருட்களுக்காக சுங்க துறை அதிகாரிகள் உங்களை கைது செய்து விடுவார்கள் என மிரட்டி  லட்சக்கணக்கில் சென்னையை சேர்ந்த பலரிடம் பணத்தை பெற்றுள்ளனர். 

இதையும் படிங்க;- செங்கல்பட்டில் பயங்கரம்! ஸ்கெட்ச் போட்டு பாமக முக்கிய பிரமுகர் படுகொலை! பதற்றம்! துப்பாக்கிச்சூடு.!

இந்த சம்பவம் தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் நைஜீரியா நாட்டை சேர்ந்த குகோ பிரான்சிஸ்கோ(40), துரு கிளிண்டன் (28) ஆகிய இருவரும் இந்தியாவில் தங்கி இருந்து கடந்த 2 ஆண்டுகளாக லட்சக்கணக்கில்  பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் மணிப்பூரை சேர்ந்த டபிதா அனா என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 லேப்டாப், விலை உயர்ந்த செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios