பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி டொக்கன் ராஜா ஓட ஒட வெட்டி படுகொலை.. 20 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி..!
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா(40). பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து வெளிவந்த டொக்கன் ராஜா மதுராந்தகத்தில் வசித்து வந்தார்.
சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி சிடி மணி கூட்டாளியான ரவுடி டொக்கன் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா(40). பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து வெளிவந்த டொக்கன் ராஜா மதுராந்தகத்தில் வசித்து வந்தார்.
இதையும் படிங்க;- செங்கல்பட்டில் பயங்கரம்! ஸ்கெட்ச் போட்டு பாமக முக்கிய பிரமுகர் படுகொலை! பதற்றம்! துப்பாக்கிச்சூடு.!
இந்நிலையில், டொக்கன் ராஜாவின் சகோதரர் மகள் வழக்கறிஞர் பணிக்கு முதல் நாள் செல்வதையொட்டி வாழ்த்த மயிலாப்பூர் பல்லக்குமாநகருக்கு சென்று இருந்தார். அப்போது, வெளியே வந்த டொக்கன் ராஜாவை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனையடுத்து, உயிர் பயத்தில் ஓடிய அவரை அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று படுகொலை செய்தது. பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க;- மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! 14 பெண்கள்! 32 ஆண்கள்! உல்லாசம்?
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் டொக்கன் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2001-ம் ஆண்டு ரவுடி துரைக்கண்ணு என்பவரை டொக்கன்ராஜா கூட்டாளிகள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக டொக்கன் ராஜா துரைகண்ணு கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. டொக்கன் ராஜா பாஜகவில் எஸ்.சி அணி செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.