மருமகளை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற மாமனார், மகன் கைது!
மருமகளை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்த மாமனார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியில் வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமை செய்ததோடு, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் எரித்து கொலை செய்த மாமனார் மற்றும் அவரது மகனும், அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனந்த் சௌபே என்பவரது 22 வயது மனைவி வரதட்சணைக் கொலை தொடர்பாக சங்கர் தயாள் சவுபே மற்றும் அவரது மகன் ஆனந்த் சௌபே ஆகியோரை கைது செய்துள்ளதாக பாலியா காவல்நிலைய அதிகாரி முகமது உஸ்மான் தெரிவித்துள்ளார்.
போலீசார் தெரிவித்துள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ரூ. 50,000 வரதட்சணை மற்றும் தங்கச் சங்கிலிக்காக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அவர்கள், அப்பெண்ணை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கணவனை கொன்றுவிட்டதாக ஒப்புக் கொண்டார் மனைவி; ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் உயிருடன் வந்தார் கணவர்!!
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அதில், “அந்த பெண் எரிக்கப்படுவதற்கு முன்பு தனது மாமனார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் ஜூலை 3ஆம் தேதி உயிரிழந்தார்.” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அப்பெண்ணின் கணவர் ஆனந்த் சௌபே, மாமனார் சங்கர் தயாள் சவுபே ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.