கணவனை கொன்றுவிட்டதாக ஒப்புக் கொண்டார் மனைவி; ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் உயிருடன் வந்தார் கணவர்!!
கேரளாவில் பத்தனம்திட்டாவில் உள்ள பாடம் என்ற இடத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், தொடுபுழாவில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) உயிருடன் மீட்கப்பட்டார்.
கேரளாவில் தொடுபுழா டி.எஸ்.பி அலுவலகத்துக்கு நவ்ஷாத் அழைத்து வரப்பட்டார். கணவரைக் கொன்றதாக ஒப்புக் கொண்ட அவரது மனைவி அப்சானா கைது செய்யப்பட்டு இருந்தார்.
மனைவியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக நவ்ஷாத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை கொன்றுவிட்டதாக மனைவி அஃப்சனா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் உயிருடன் திரும்பி வந்து இருக்கும் நவ்ஷாத் ஊடகங்களுக்குஅளித்த பேட்டியில், தான் காணாமல் போன விவகாரம் மற்றும் தேதியும் தனக்குத் தெரியாது என்றும், தான் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் தனக்குத் தெரியாது என்றும் கூறினார்.
இப்பகுதியில் நவ்ஷாத் இருப்பதாக தொம்மன்குத்து வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொம்மன்குத்து பகுதியைச் சேர்ந்த ஜெய்மன் என்பவர் நவ்ஷாத்தை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளார். ஜெய்மோனிடம் தன்னை தேடுவது தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த 15 மாதங்களாக நவ்ஷாத் தனது மனைவியிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ பேசவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரும் போனை பயன்படுத்தவில்லை.
மனைவி அஃப்சனா தனக்கு தீங்கு செய்யலாம் என்ற பயத்தில் வீட்டை விட்டு ஓடிவிட்டதாக நவ்ஷரா போலீசில் தெரிவித்துள்ளார். ''இந்த நிலையில் தன்னை கொன்றதாக அவள் ஏன் ஒப்புக்கொண்டாள் என்று தெரியவில்லை” என்றும் நவ்ஷாத் குறிப்பிட்டுள்ளார்.