தோட்டத்திற்குத் தூங்க சென்ற விவசாயியை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் மதுரை உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். விவசாயி வெள்ளைச்சாமி தோட்டத்தில் புதிய வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதால் கட்டுமான பொருட்களை பாதுகாக்க வேண்டும் என நேற்று இரவு வீட்டிற்கு வந்து சாப்பிட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார் வெள்ளைச்சாமி. காலையில் வெள்ளைச்சாமியின் மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது வெள்ளைச்சாமி உடல் முழுவது கொடூரமான முறையில் வெட்டப்பட்டு கிடந்துள்ளார். 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இரவில் தோட்டத்திற்கு தூங்க சென்ற விவசாயிக்கு நடத்த கொலை சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் விவசாயியை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றது யார் என்பதை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.