சென்னையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை.. கூட இருந்த நண்பனே செய்த பயங்கரம்.. வெளியான பகீர் காரணம்.!
சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்கிற லொடங்கு மாரி(40). இவருக்கு பார்வதி என்கின்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அப்பகுதியில் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லொடங்கு மாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி என்கிற லொடங்கு மாரி(40). இவருக்கு பார்வதி என்கின்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 29 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அப்பகுதியில் வட்டி தொழிலும் செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- பிரபல பைனான்சியர் படுகொலை வழக்கு.. திமுக ஊராட்சி தலைவர் குண்டர் சட்டத்தில் கைது..!
இவர் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கொருக்குபேட்டை சேர்ந்த மாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லொடங்கு மாரியை சரமாரியாக வெட்டியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து அந்தத கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளதத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த லொடங்கு மாரியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி லொடங்கு மாரி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடிவருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே சேர்ந்து நண்பனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- புல் மப்பில் தகராறு.. தடுக்க முயன்ற காவலர்களை பீர்பாட்டிலால் குத்திய ரவுடியின் நிலைமையை பார்த்தீங்களா?