இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ரவுடி டபுள் ரஞ்சித்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனையடுத்து, ரஞ்சித்தை தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.
சென்னை வில்லிவாக்கத்தில் பட்டப்பகலில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் கொலை
சென்னை வில்லிவாக்கம் எம்பார்நாயுடு தெருவை சேர்ந்தவர் டபுள் ரஞ்சித்(22). பிரபல ரவுடியான இவர் மீது ஐசிஎப், வில்லிவாக்கம், செங்குன்றம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டு
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ரவுடி டபுள் ரஞ்சித்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதனையடுத்து, ரஞ்சித்தை தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.
இதையும் படிங்க;- ஓயாத டார்ச்சர்.. தாலி கட்டி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதலன் செய்த பகீர் காரியம்..!

6 பேர் கைது
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரஞ்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ரவுடி ரஞ்சித் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
