ஓயாத டார்ச்சர்.. தாலி கட்டி லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதலன் செய்த பகீர் காரியம்..!
கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். அதே நகைக்கடையில் பணிபுரிந்து வந்த காயத்ரி தேவி (24) என்பவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் நகைகடைக்கு சென்று புகார் செய்தார்.
சர்ச்சில் தாலிகட்டும் போட்டோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்ததால் கள்ளக்காதலியை கொன்றேன் என சரணடைந்த வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதல்
கேரள மாநிலம் கொல்லம் அருகே பரவூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன். திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். அதே நகைக்கடையில் பணிபுரிந்து வந்த காயத்ரி தேவி (24) என்பவருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் பிரவீனின் மனைவிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் நகைகடைக்கு சென்று புகார் செய்தார்.
இதையும் படிங்க;- "என்னை வச்சிக்கிட்டது போதும் கட்டிக்க".. டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலி.. கடுப்பில் போலீஸ்காரர் செய்த காரியம்
இதையடுத்து பிரவீன் திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். காயத்ரி தேவி பணியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதையடுத்து தன்னை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று காயத்ரி தேவி, பிரவீனிடம் வற்புறுத்தி வந்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்வதாக அவர் கூறியுள்ளார். இதை காயத்ரிதேவி ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, அவரை சாமாதப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து காயத்ரி தேவிக்கு பிரவீன் தாலி கட்டி உள்ளார். அந்த போட்டோக்களை காயத்ரி தேவி தன்னுடைய போனில் எடுத்து வைத்திருந்தார்.
லாட்ஜில் கொலை
இந்த நிலையில் நேற்று காயத்ரி தேவி திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள ஒரு லாட்ஜில் சடலமாக கிடந்தார். காயத்ரிதேவி லாட்ஜில் இறந்து கிடக்கும் விவரத்தை பிரவீன் தான் ஓட்டலுக்கு போன் செய்து கூறினார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரவீன் அந்த லாட்ஜில் அறை எடுத்ததும், பின்னர் காயத்ரி தேவி அங்குவந்ததும் தெரியவந்தது. காயத்ரி தேவி இறந்த பின்னர் பிரவீன் மாயமாகிவிட்டார்.
இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிப்புரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. அப்புறம் நடந்த கூத்த பாருங்க
போலீசில் சரண்
இந்நிலையில், நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில்;- காயத்ரி தேவியை திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு கிடை யாது. அவரது வற்புறுத்தல் காரணமாகவே சர்ச்சில் வைத்து தாலி கட்டினேன். மேலும், திருவண் ணாமலைக்கு நான் இடமாற்றம் செய்யப்பட்டதால் அங்கு வந்து உடன் தங்கியிருக்கப் போவதாக காயத்ரி தேவி கூறினார். நான் அவரை கைவிட்டுவிடுவேன் என்று அவர் பயந்தார். அதனால், தாலி கட்டும் போட்டோவை அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் பகிர்ந்தார். இதுதொடர்பாக ஓட்டல் அறையில் எங்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கோபத்தில் காயத்ரி தேவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன். இவ்வாறு பிரவீன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.