ரூ.23 லட்சம், 300 சவரன் நகை போட்டும் வரதட்சணை கொடுமை.. குடும்பத்தோடு அலேக்கா தூக்கிய மதுரை போலீஸ்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் கொண்டல்ராஜ் மகன் ஜனார்த்தனுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தங்க நகை மற்றும் வரதட்சணை ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. 

Dowry issue... chief electoral officer family Arrest

மதுரையில் மருமகளை பல லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகாரில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி இயக்குனர் கொண்டால்ராஜ் அவரது மகன் ஜனார்த்தனன் அவரது மனைவி சுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் அழகர். கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் வர்ஷா. இவருக்கும், மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி இயக்குனராக பணிபுரியும் கொண்டல்ராஜ் மகன் ஜனார்த்தனுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது தங்க நகை மற்றும் வரதட்சணை ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேல் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வர்ஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க;- வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்திய மருத்துவ கணவர்.. எலி மருந்து குடித்து அரசு பெண் மருத்துவர் தற்கொலை.!

Dowry issue... chief electoral officer family Arrest

அந்த புகாரில் வர்ஷா கூறுகையில்;- எனது தந்தை பெயரில் இருந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை எனது மாமனார் கொண்டல்ராஜ் பெயருக்கு மாற்றித்தரவும், வீடு கட்டுவதற்கு ரூ.50 லட்சத்தை எனது பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறும் கூறி எனது கணவர், அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர். என் பெயரிலும், கணவர் பெயரிலும் நிலம் வாங்குவதாக கூறி திருமணத்திற்கு முன்பாகவே ரூ.23 லட்சம் பெற்றனர். அந்த தொகையும் என்ன ஆனது என தெரியவில்லை. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

Dowry issue... chief electoral officer family Arrest

இந்த புகாரின் பேரில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து வர்ஷாவின் கணவர் ஜனார்த்தன், மாமனார் மின்வாரிய அதிகாரி கொண்டல் ராஜ், மாமியார் சுமதி ஆகியோரை கைது செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கணவர் ஜனார்த்தனன் சிறையில் அடைக்கப்பட்டார். மாமனார், மாமியார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-  120 சவரன் நகைக்காக அண்ணியை திருமணம் செய்த கொழுந்தன்... இறுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios