நடத்தையில் தீராத சந்தேகம்.. ஃபாரினில் இருந்து வந்ததும் நடுரோட்டில் மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சூர்யா. தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார்.
சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஆத்திரத்தில் கணவன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சூர்யா. தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். பிரபாகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில், பிரபாகரனுக்கு மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருக்கும் போது இனிச்சது! இப்ப கசக்குதா? கழுவி ஊற்றிய கள்ளக்காதலி!ஆத்திரத்தில் கதறவிட்ட கள்ளக்காதலன்
இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல சூர்யா தனது வீட்டில் இருந்து இன்று காலை இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கணவர் பிரபாகரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை கொண்டு மனைவி சூர்யாவின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறி சூர்யா கீழே விழுந்துள்ளார். அப்போது, கணவர் தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து சூர்யாவின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- குழந்தை என்னுடைய ஜாடையில் இல்லை! இது வேற யாருக்கோ பிறந்தது! ஆத்திரத்தில் தந்தை என்ன செய்தார் தெரியுமா?
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, பிரபாகர் அங்கிருந்து தப்பித்து சென்று தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.