உல்லாசமாக இருக்கும் போது இனிச்சது! இப்ப கசக்குதா? கழுவி ஊற்றிய கள்ளக்காதலி!ஆத்திரத்தில் கதறவிட்ட கள்ளக்காதலன்
பொதுவெளியில் தகாத வார்த்தையால் திட்டிய கள்ளக்காதலியை வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கிற குள்ளன். பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில். அதே பகுதியை சேர்ந்த அருண்செல்வம் மனைவி பிரியா (28) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாப்பின் மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து மைத்துனர்கள் கண்டித்து அறிவுரை வழங்கினர். இதனையடுத்து, பிரியாவுடனான தொடர்பை துண்டித்துள்ளார். செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போதும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பிரியா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே நேற்று பாலூர் சாலையில் பிரதாப் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த பிரியா பல பெண்கள் முன்னிலையில் பிரதாப்பை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரதாப் இன்று அதிகாலை பிரியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த பிரியா மீது மண்ணெண்ணெய் மற்றும் தின்னர் இரண்டையும் கலந்து ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் அருண்செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய பிரதாப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.