தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி.. இதற்கிடையில், பிரியங்கா கடந்த 27-ம் தேதி தனது பைக் பஞ்சர் ஆனதால் ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்கச்சாவடி அருகே பைக்கை நிறுத்தி உள்ளார்

அப்போது அவருக்கு உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் பிரியங்காவை கடத்திச்சென்று கற்பழித்து கொடூரமாக எரித்துக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் குற்றச்சாட்டப்பட்டவர்கள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். 

இதைத் தொடர்ந்து நேற்று இரவு குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சம்பவ இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் போலீசை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசாரின் இந்த செயலுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.