அதிமுக - பிஜேபி கூட்டணியில் மாட்டிக்கொண்ட தேமுதிக, பாமகவால் கணிசமான வாக்கு வங்கிகளை பிரிக்க முடியும் என சொல்லப்படுகிறது ஆனால்,  இந்த இரண்டு கட்சிகளின் கதையை முடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது திமுக.

அதாவது தேமுதிக, பாமக செல்வாக்கு உள்ள வட மாவட்டங்களில் உள்ள வாக்குகளில் தேமுதிக பாமகவுக்கு விழாது, பாமக வாக்கு தேமுதிகவுக்கு விழாது என்ற பேச்சு நிலவியதால் ராமதாஸ் விஜயகாந்த் வீட்டிற்க்கே சென்று இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாடா மாவட்டங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் வாக்கு வங்கியை வைத்திருக்கும், தேமுதிக பாமக கட்சி தொண்டர்களின் எதிர்ப்பையும் வரும் தேர்தலில் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளானது திமுக. பாமகவை பறிகொடுத்துவிட்டு திருமாவளவனை சேர்த்துக்கொண்டதால் வன்னியர்களின் மத்தியில் அதிருப்தியை சந்திக்க நேரிட்டதால், வடதமிழக தனி தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் திமுக போட்டியிடவும் முடிவு செய்தது.  வட தமிழகத்திலும் நிலைமை மோசம் என்பதை உணர்ந்த திமுக. அதனால்தான் கடைசி முயற்சியாக வேல்முருகனை ஆதரவுக்கு வைத்து கொண்டுள்ளது திமுக.

இப்போது வேல்முருகனும் திமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக சொல்லியிருப்பதால், வட மாவட்ட வாக்குகளையும்,   இனி வேல்முருகன் சாமாளித்துக் கொள்வார் என சொல்லபப்டுகிறது. அதுமட்டுமல்ல வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக  முயற்சிகளில் வேல்முருகன் பார்த்துக்கொள்வார். வட மாவட்டத்தில் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது. 

இது போக, வடமாவட்டத்தை தாண்டினால் அடுத்து பாமகவுக்கு பாடம் கத்துக்கொடுக்க காத்திருக்கும்  பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருக்கிறார்கள். இவை அத்தனையையும் திமுகவுக்கு வாக்குகளாக மாற்ற வேல்முருகன் களம் இறங்குவார் என சொல்லப்படுகிறது. 

இது போக சிதம்பரத்தில் போட்டிப்போகும் திருமாவளவனும், வேல்முருகனும் நபர் என்பதால் சிதம்பரம் வெற்றி உறுதிசெய்யப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.  வடமாவட்டங்களில் உள்ள வன்னியர்கள் வாக்குகளை வேல்முருகனை வைத்து மடக்கியதைப்போலவே. அடுத்ததாக  காடுவெட்டி குடும்பத்தை பாமகவுக்கு எதிராக திருப்பிவிட ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தெரிகிறது.