மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்பட திறப்பு விழா சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் நடைபெற்றது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அவர் சென்ற நிலையில், சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகியான மதன்(32) என்பவர் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
சென்னை திருவல்லிக்கேணியில் திமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த திமுக நிர்வாகியின் புகைப்பட திறப்பு விழா சென்னை பல்லவன் சாலை காந்தி நகரில் நடைபெற்றது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அவர் சென்ற நிலையில், சென்னையின் மிக முக்கிய பகுதியாக கருதப்படும் திருவல்லிக்கேணி பகுதியில் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகியான மதன்(32) என்பவர் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- திமுக வட்டச்செயலாளர் கொலை வழக்கு.. கூலிப்படையை ஏவி 30 லட்சம் பேரம் பேசியது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

அப்போது கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியைடந்த மதன் அவர்களிடம் தப்பிக்க ஊடினார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டிய கும்பல் தலை கை மார்பு பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மதன் சிறிது நேரத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை பார்த்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இதையும் படிங்க;- "என்னை வச்சிக்கிட்டது போதும் கட்டிக்க".. டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலி.. கடுப்பில் போலீஸ்காரர் செய்த காரியம்

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அதிமுகவில் இருந்த மதன் சமீபத்தில் திமுகவில் கட்சியில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது தெரியவந்தது. அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.