திமுக வழக்கறிஞரை வளைச்சு வளைச்சு வெட்டி படுகொலை செய்த கும்பல்.. நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் பணி முடிந்து நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
நாமக்கல் அருகே திமுக வழக்கறிஞர் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த வரகூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் பணி முடிந்து நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதையும் படிங்க;- கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்.. வெறி தீராததால் 3 துண்டுகளாக வெட்டி படுகொலை..!
ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- திருமணமான 3 நாட்களில் காதல் தம்பதி வீடு புகுந்து வெட்டி படுகொலை.. காரணம் என்ன? கைதான தந்தை பகீர் தகவல்!
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டன் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி, திமுகவில் இணைந்து கொண்டார். கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.