சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கோணசமுத்திரம் ஊரட்சி, கன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். மேலும் இவர் ஏற்கனவே திமுக சார்பில் போட்டியிட்டு வென்றி பெற்று கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மற்றும் மணிகண்டன் குடும்பத்தாறுக்கும் இடையே நிலபிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுக்குறித்தான வழக்கு இன்னும் காவல்நிலையத்தில் விசாரணையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று காலை கன்னியாம்பட்டி அருகே உள்ள தேஞ்சான்வளவு என்ற பகுதியில் கந்தன் நடந்த வந்துக்கொண்டிருக்கிறார். அப்போது வழிமறித்த, சின்னபையன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் நிலப்பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சின்னபையனும் மணிகண்டன் மாறி மாறி சரிமாரியாக கந்தனை வெட்டி விட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சாலையில் அப்படியே சாய்ந்த கந்தனை அங்குள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு கந்தனன், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
இதுக்குறித்து கந்தனின் மனைவி கொங்கணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
