தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அமைந்தகரை பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த முத்து சரவணனை போலீசார் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், முத்துசரவணனை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர். இவர் மீது வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 7 கொலை வழக்குகள், ஆள் கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

திமுக வட்டச்செயலாளர் செல்வம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளியான முத்து சரவணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

வட்ட செயலாளர் கொலை

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம்(37). இவர் ஆலந்தூர் வட்ட திமுக செயலாளராக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கூலிப்படையினர் கைது

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இவ்வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது, அருண் கூலிப்படையை இயக்கியது வியாசர்பாடி முருகேசன் என்ற ரவுடி என்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க;- இதுக்காகதா திமுக செல்வத்தை போட்டு தள்ளினேன்.. கூலிப்படை தலைவன் முருகேசன் பரபரப்பு வாக்குமூலம்..!

இந்நிலையில், அருண் அளித்த தகவலின் அடிப்படையில் வியாசர்பாடியில் பதுங்கியிருந்த முருகேசன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அடிப்படையிலும், அவர்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கூலிப்படையின் தலைவன் என்பதால், கொலைக்கான காரணத்தை கண்டறிய முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் காவலில் எடுத்து விசாரித்தனர். 

முக்கிய குற்றவாளி கைது

இவ்வழக்கில், தலைமறைவாக உள்ள மற்றொரு முக்கிய குற்றவாளியான கமுதி முத்து சரவணன்(31), சன்டே சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அமைந்தகரை பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த முத்து சரவணனை போலீசார் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், முத்துசரவணனை கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர். இவர் மீது வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட 7 கொலை வழக்குகள், ஆள் கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை வழக்கில் தென்சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மற்றும் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;- திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு.. கூலிப்படையை ஏவியது இவரா? வெளியான பரபரப்பு தகவல்..!