Asianet News TamilAsianet News Tamil

DMK: ஆளுங்கட்சி பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் ரீத்தாபுரம் பேரூர் திமுக கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

DMK Branch Secretary murder
Author
Kanyakumari, First Published Dec 7, 2021, 11:30 AM IST

குளச்சல் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பன்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் குமாரசங்கர். இவர் ரீத்தாபுரம் பேரூர் திமுக கிளை செயலாளராக உள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வேலைக்கு சென்று இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க: அடிப்பாவி.. திருமணமாகாமலேயே கர்ப்பம்.. சிசுவை துடிதுடிக்க கழிவறையில் அமுக்கி கொன்ற தாய்.. பகீர் வாக்குமூலம்.!

DMK Branch Secretary murder

இதையும் படிங்க:- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. காதல் மனைவி துடிதுடிக்க கொலை.. ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தை.!

அப்போது, அங்கிருந்து மறைந்திருந்த கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது குமார சங்கரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டது. 

DMK Branch Secretary murder

இதையும் படிங்க:- டுட்டோரியல் காலேஜில் வைத்து உல்லாசம்.. பாஸ் பண்ண வைப்பதாக கூறி 17 வயது மாணவியை மாசமாக்கிய ஆசிரியர்..!

இது தொடர்பாக குளைச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பிடித்த தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios