உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்.. கள்ளக்காதலி சொன்ன உடனே கணவர் என்ன செய்த பகீர் சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (40). பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (40). பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். ராஜசேகருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சரோஜா (30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. வாழைத்தோப்புக்குள் தூக்கிச் சென்று வாயை பொத்தி கதற கதற கல்லூரி மாணவி பலமுறை பலாத்காரம்.!
இந்த விவகாரம் நாளடைவில் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதனால், குடும்பத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து வர ராஜசேகர் மாமியார் வீட்டுக்கு சென்று அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகர் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார்.
இதனையடுத்து, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. பின்னர், சமயபுரத்தில் பதுங்கி இருந்த ராஜசேகர் மற்றும் கள்ளக்காதலி சரோஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்