பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் சைபராபாத் காவல் ஆணையர் ஏற்கனவே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் வாங்கியவர் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர்.  இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  இக்கொடூர சம்பவத்தை  ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. 

இவ்வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழி செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்தது,  இதனால் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர் .  அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது அதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.  அதாவது விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே நான்கு பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர் . இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்ததற்காக சைபராபாத் காவல் ஆணையர்  சஜ்ஜனாரை  மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர் . ஏற்கனவே இவர் பணியாற்றிய இடங்களில் அதிரடி கமிஷனர் என்ன பெயர் வாங்கியவர் என கூறப்பட்டுகிறது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு வாரங்கல் எஸ் பி ஆக இருந்தபோது ஆசிட் வீச்சில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றவர்  சஜ்ஜனார், என்பதால் இவரை போலீஸ் வட்டாரத்தில் என்கவுண்டர் போலீஸ் என அழைப்பதாகவும் கூறப்படுகிறது .  தற்போது பெண் மருத்துவர் பாலியல் வழக்கிலும் குற்றவாளிகளை அதிரடியாக என்கவுண்டர் செய்து தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சஜ்ஜனார். தற்போது நடந்துள்ள கவுண்டருக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாருக்கு ஆதரவாக பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.