வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சோட்டாபாய் அவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார் அவர் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளில் 3 பசு மாடுகளை இன்று அதிகாலை  மர்ம நபர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர் 

இதையடுத்து  மாடுகள் அலறியதால் வெளியில் வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்படும்போது மர்ம நபர்கள் தப்பி உள்ளனர்


 
பின்னர் பசு மாடுகளை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மாடுகளை பரிசோதித்த கால்நடை  மருத்துவர்கள்  அவை சில மணி நேரங்களில் அல்லது நாளை  உயிரிழந்து விடும் என்று தெரிவித்ததால் 3 பசு மாடுகளை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர் 

தற்போது 3 பசு மாடுகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது இதுகுறித்து பசு மாட்டின் உரிமையாளர் சோட்டா பாய் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்