கோவை  ரயில் நிலையத்தில் பார்சல் அலுவகம் இயங்கி வருகிறது. இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து வரும் பார்சல்கள் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனிடையே கோவையில் பெய்து வரும் மழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பார்சல் அலுவலக மேற்கூரையும்,  சுவரும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 4 நபர்களை மீட்பு பணியினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த மீட்புபணியில் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்த பவளமணி மற்றும் இப்ராகிம் என்ற இருவரும்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.