பேருந்து நிலையத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
12-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க..தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது.. போலீஸ் பலத்த பாதுகாப்பு !
இந்த நிலையில் சிதம்பரத்தில் பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம் மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க..2022ம் ஆண்டு முடிய 60 நாட்கள் தான் இருக்கு, ஆனா ? மீண்டும் சுனாமி.. நாஸ்டர்டாமஸ் கணிப்பு பகீர்
அரசு காப்பகத்தில் உள்ள மாணவியை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அவசர கதியில் மாணவியை தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் என்ன ? அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதையும் படிங்க..மாணவிகளுக்கு சைக்கிள்.! பெண்களுக்கு ஸ்கூட்டி.! தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அள்ளிக்கொடுத்த பாஜக !