திருச்சியில் மோதலை தடுக்கச் சென்ற கட்டிட தொழிலாளி அடித்து கொலை - 8 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் இருவருக்கிடையேயான மோதலை தடுக்கச் சென்ற கட்டிடத் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

construction worker killed in trichy district 8 persons arrested in these issue vel

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் அடுத்துள்ள பபுங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). கட்டடத் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது உறவினரான முத்து, வீரமணியுடன் இரு சக்கர வாகனத்தில் ராம்ஜிநகர் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் பச்சநாச்சியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே ராம்ஜிநகரைச் சேர்ந்த தர்ஷன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் வேகமாக மோதுவது போல் சென்றுள்ளது. 

இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தர்ஷன் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடி விட்டான். கார்த்திக், தர்ஷனின் பைக்கை தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார்.  பின்னர் தர்ஷன், கார்த்திக் வீட்டிற்கு சென்று அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தனது பைக்கை எடுத்து சென்றார். தர்ஷன் இந்த பிரச்னையை மனதில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கார்த்திக் வீட்டிற்கு  சென்று தான் வைத்திருந்த செங்கல், உருட்டு கட்டையால்  தாக்கியுள்ளனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைக் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி உதயகுமார் அவர்களை தடுக்கச் முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் உதயகுமாரை(31) சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த உதயகுமார் உட்பட கார்த்திக் (38), வீரமணி (29), சக்திவேல் (40)  நான்கு பேரையும் அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிட்டிசன் பட பாணியில் அதிகாரிகளால் புறக்கணிக்கப்படும் கிராமம்; அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆதங்கம்

இதில் உதயகுமார் சிகிச்சை பலனின்றி அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோமரசம்பேட்டை ஆய்வாளர் முகமதுஜாபர் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக தர்ஷன், தீனா, முருகன், கபில், மணீஷ், இனியா உட்பட 8 பேரை கைது செய்தார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய  தலைமறைவாக உள்ள பப்புவை காவல்துறையினர்  தேடி  வருகின்றனர். மோதலை தடுக்க சென்றவர் கொலையான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios