கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமணமான ஆண் நண்பரை காவல் துறையினர் கேரளாவில் கைது செய்தனர்.

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய் (வயது 28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று இடையர்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சுப்புலட்சுமி (20) என்பவர் டி.கோட்டாம்பட்டியில் உள்ள தனது ஆண் நண்பர் சுஜய் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தகராறில் சுஜய், சுப்புலட்சுமியை கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளார். இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

எந்த மாநிலத்தில் தான் மது விற்பனை இல்லை? - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்

அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மகாலிங்கபுரம் காவல் துறையினர் சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மகாலிங்கபுரம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே தலைமறைவாக இருந்த ஆண் நண்பர் சுஜய்யை காவல் துறையினர் கேரளாவில் வைத்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் கள்ளக்காதலா, வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலவச பயணத்தால் போக்குவரத்து துறைக்கு நட்டம்; பேருந்து நிறுத்தப்பட்டது குறித்து ஆட்சியர் பகீர் விளக்கம்