உதவுவது போல் நடித்து பெண்ணிற்கு பாலியல் தொல்லை… கல்லூரி பேராசிரியர் கைது… வீடியோ வெளியானதால் பரபரப்பு!!
சென்னையில் பெண்ணிற்கு உதவுவது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பெண்ணிற்கு உதவுவது போல் நடித்து பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடந்த 23 ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அவரது இருசக்கரத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணி இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் அந்த பெண் தனது வாகனத்துடன் கீழே விழுந்தார். பின்னர் அந்த நபர் பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து அப்பெண் அருகே சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கணவருக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசம்.. திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய இளம்பெண் கொலை.. வெளியான பகீர் தகவல்.!
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை தாக்கியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அந்த நபர், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி இரும்பு கேட்டில் தலையை பிடித்து இடித்து கீழே தள்ளி வயிற்றில் கைகளால் நான்கைந்து முறை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுக்குறித்து அந்த பெண் காவல்துறயினரிடம் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். பின்னர் சிசிடிவி காட்சியின் உதவியோடு, தேடிய நிலையில் அவர் வேளச்சேரியை சேர்ந்தவர் என்று தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்ததோடு அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஹேக் செய்யப்பட்ட தொழிலதிபரின் மொபைல் ஃபோன்… ரூ.1 கோடியை இழந்ததால் அதிர்ச்சி!!
மேலும் அவர் மீது விரும்பதகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மிரட்டல் விடுப்பது, தாக்குவது, மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது பெயர் தமிழ்செல்வன் என்பதும், அவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருந்து வருவதும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர் பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.