Asianet News TamilAsianet News Tamil

ஓயாத டார்ச்சர்! மரம் அறுக்கும் எந்திரத்தால் கை, கால், ஆணுறுப்பை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலி! அதிர வைக்கும்

கவிதாவின் வீட்டில் பிரபு வாடகைக்கு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் அமுல் திவாகருடனும் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் பிரபுவை கவிதா கண்டுகொள்ளவில்லை. இதனால் கவிதாவுக்கு தொடர்ந்து பிரபு டார்ச்சர் கொடுத்துள்ளார்.

coimbatore murder case...3 people including woman were arrested
Author
First Published Sep 22, 2022, 12:12 PM IST

ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய அழகு நிலைய ஊழியரை காதலர்களை வைத்து கொலை செய்து மரம் அறுக்கும் எந்திரம் மூலம் உடலை 12 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசப்பட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் வி.கே.எல் பகுதியில் கடந்த 15ம் தேதி குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்ட மனிதனின் கை ஒன்று ரத்தம் சொட்ட சொட்ட கவரில்  வைத்து வீசப்பட்டுள்ளதாக துப்புரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குப்பை தொட்டியில் இருந்த  கையை மீட்டு அந்த கை யாருடையது? என தீவிரமாக விசாரித்தனர். 

coimbatore murder case...3 people including woman were arrested

 இந்நிலையில் அந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு (39) என்பவருடையது என தெரியவந்தது. பிரபு கோவை காந்திபுரத்தில் அழகு கலை நிபுணராக பணியாற்றியதோடு, சரவணம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததும். கடந்த 14ம் தேதி இரவு மாயமானதாக அவரது மனைவி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பிரபு மாயமான நேரமும், கை மீட்கப்பட்ட நேரமும் ஒத்துப் போனதை வைத்து கைரேகை ஆய்வுக்குட்படுத்தி அந்த கை பிரபு உடையது தான் என்பதை உறுதி செய்தனர். 

இதையும் படிங்க;- வீடு வீடாக சென்று ரகசிய கேமரா.. ஆன்டிகள், இளம்பெண்கள் குளிப்பதை அங்குலம் அங்குலமாக ரசித்த வாலிபர்கள்..!

பிரபு வசித்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவை பார்த்தபோது அவர் பைக்கில் வீட்டுக்கு வந்து பின்னர் வெளியே சென்றது பதிவாகி இருந்தது. இதுபற்றி தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் பிரபு பியூட்டி பார்லரில் பணியாற்றியபோது அங்கு சில பெண்கள் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்களுடன் பிரபு நெருக்கமாக பழகி வந்துள்ளார். மேலும் செல்போனிலும் அதிக நேரம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே பெண் விவகாரம் காரணமாக பிரபுவை யாராவது மர்மநபர்கள் கடத்தி சென்று மது வாங்கி கொடுத்து கொலை செய்திருக்கலாம். மேலும், ஆத்திரம் தீராததால் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஒவ்வொரு பகுதியாக வீசியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர். 

கொலையில் தொடர்புடைய கோவையை சேர்ந்த கவிதா (37) மற்றும் அமுல் திவாகர் (34), கார்த்திக் (28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கவிதாவின் வீட்டில் பிரபு வாடகைக்கு இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் அமுல் திவாகருடனும் கவிதாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் பிரபுவை கவிதா கண்டுகொள்ளவில்லை. இதனால் கவிதாவுக்கு தொடர்ந்து பிரபு டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய கவிதாவும், அமுல் திவாகரும் முடிவு செய்துள்ளனர். நண்பர் கார்த்திக்குடன் சேர்ந்து திட்டமிட்டு காந்திநகரில் உள்ள ஒரு வீட்டுக்கு பிரபுவை கவிதா அழைத்துள்ளார். அங்கு வந்த பிரபுவை 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை 12 துண்டுகளாக தனித்தனியாக வெட்டி கூறுபோட்டு மேட்டுப்பாளையம் ஆற்றில் வீச காரில் கொண்டு சென்றுள்ளனர். அங்கு போலீஸ் கெடுபிடி இருந்ததால் மீண்டும் காரில் திரும்பினர்.

coimbatore murder case...3 people including woman were arrested

வரும் வழியில் குப்பைத்தொட்டியில் கையை வீசிவிட்டு சென்றனர். தலை மற்றும் உடலை துடியலூர் விஏஓ அலுவலகம் பின்புறம் உள்ள கிணற்றிலும், 2 கால்கள் மற்றும் மற்றொரு கையை வேறு கிணற்றிலும் வீசியது தெரியவந்தது. இந்த தகவலின்பேரில் போலீசாரும், கவுண்டம்பாளையம் தீயணைப்பு வீரர்களும் பிரபுவின் உடல் பாகங்களை மீட்டனர். அவை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையும் படிங்க;-  மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

Follow Us:
Download App:
  • android
  • ios