தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த டாஸ்மாக் பார் ஊழியர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூர் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகிலேயே பாரும் செயல்பட்டு வருகிறது. நேற்று நெடுங்குளம் பூமணியூரை சேர்ந்த பிரபல ரவுடியான துரைராஜ் என்பவர் இந்த பாருக்கு சென்று மது குடித்தார். அப்போது பாரின் பக்கவாட்டு சுவரில் துரைராஜ் சாய்ந்து உட்கார்ந்த போது திடீரென அந்த சுவர் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் விபசாரம்... மஜாவாக இருக்கும் விஐபிக்கள், போலீஸ் அதிகாரிகள்.. 2 மணி நேரத்துக்கு ரூ.3500..!

இதனை பார்த்த பார் ஊழியர்களான எடப்பாடி ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (32), அண்ணாமலை (30) ஆகிய 2 பேரும் உன்னால் தான் சுவர் விழுந்தது என்று கூறி துரைராஜிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால், தகராறு ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற துரைராஜ் ஆத்திரம் அடைந்தார். பார் ஊழியர்கள் தன்னை இப்படி பேசி விட்டார்களே என்று நினைத்த அவர் 2 பேரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதனையடுத்து, 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பாருக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- ஆறப்பொறுக்காத அதிமுக... தமிழகத்தில் என்.பி.ஆர். கணக்கெடுப்பை நிறுத்தி வைத்து அதிரடி..!

பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அண்ணாமலை படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த அண்ணாமலையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்வர் தொகுதியில் படுகொலை நடத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.