திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய கணபதி சில்க்ஸ் கடை உரிமையாளரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருமணம் செய்வதாக உல்லாசம்
நவீன யுகத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் மிகவும் எளிமையாக மாறிவிட்டது. முதல் நாள் பார்த்தால் போதும் அடுத்த நாள் பிக்அப், மறுநாள் டிராப் என கடிகார முள் வேகத்திற்கு இணையாக மாறிவிட்டது தற்போதைய காதல். அப்படி ஒரு காதல் மோசடி தான் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான ஸ்ரீகணபதி சில்க்ஸ். இந்த ஜவுளிக்கடையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்திவருகிறார்.இந்தக் கடையில் ஜவுளி விற்பனை மட்டுமல்லாது அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தை பெரியகுளம் பகுதியை சேர்ந்த மேனகா (29) என்பவர் நடத்தி வந்துள்ளார். அப்போது கடை உரிமையாளர் முருகனுக்கும் மேனாகவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கணபதி சில்க்ஸ் உரிமையாளர் கைது
மேனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மேனகாவும்,முருகனும் கணபதி சில்க்ஸ் கடை மற்றும் விடுதிகள், நண்பர்களின் வீடுகளிலும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான பிரசன்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த நிச்சயதார்த்தத்தை மறைத்து முருகன் மேனகாவுடன் தொடர்ந்து தனிமையில் இருந்துள்ளார். அப்போது மேனகாவிற்கு முருகனின் நிச்சயதார்த்தம் புகைப்படம் கிடைத்துள்ளது. இதனையடுத்து கோவமடைந்த மேனகா, முருகனுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிவிட்டய் எனக்கூறி பிரச்சனை செய்துள்ளார். விடாப்பிடியாக திருமணம் செய்ய வேண்டும் எனக்கூறி மேனாகவின் கட்டாயத்தில் முருகன் தாலி கட்டியுள்ளார். மறுநாள் நமக்குள் திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லையென தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மேனகா கடந்த மார்ச் 14-ஆம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முருகனை கைது சிறையில் அடைத்தனர்.

20 நாட்களாக போராட்டம்
இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த முருகன் தலைமறைவாகியுள்ள நிலையில், தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரியும் கணபதி சில்க்ஸ் கடையில் தான் நடத்திய அழகு சாதன கடையில் இருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திரும்ப வழங்க கோரியும் இளம்பெண் மேனகா கணபதி சில்க்ஸ் கடைக்குள் பதாகையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கைது செய்த போலீசார்
சுமார் 20 நாட்கள் தினந்தோறும் கடைக்குள் போராட்டம் நடத்தி வந்தவர் மீது கடை மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கணபதி சில்க்ஸ் கடையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மேனகாவை போலீசார் குண்டுகட்டாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
