70 வயது கிழவன் செய்ற வேலையா இது! பேத்தி வயசு சிறுமி பலாத்காரம்!கொடூரனை வீடு புகுந்து போக்சோவில் தூக்கிய போலீஸ்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது தாத்தாவுடன் இந்த தொழிற்சாலையில் தங்கி அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்.
வடமாநில சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கயிறு தொழிற்சாலை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி தனது தாத்தாவுடன் இந்த தொழிற்சாலையில் தங்கி அங்கு உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார்.
இதையும் படிங்க;- காருக்குள் வைத்து பெண் வங்கி அதிகாரி குத்திக்கொலை.. வாகனம் முன் பாய்ந்து கள்ளக்காதலன் தற்கொலை.. நடந்தது என்ன?
இந்நிலையில், தொழிற்சாலையின் உரிமையாளர் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான வேலாயுதம் என்பவர் அந்த வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியிடம் மருத்துவர்கள் விசாரித்ததில் வேலாயுதம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- நைசாக பேசி இளம்பெண்ணை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம்! பலருக்கு விருந்தாக்கிய கொடூரர்கள்! பகீர் சம்பவம்!
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்திய பிறகு கயிறு தொழிற்சாலையில், உரிமையாளரான வேலாயுதம் (70) என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.