யார் கிட்ட வந்து பீடி கேக்குற? தலைக்கேறிய போதை.. தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை..!
கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது நண்பர் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து கோபி மது அருந்தியுள்ளார்.
சென்னையில் குடிபோதையில் ஒரு பீடிக்காக தலையில் கல்லை போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் கோபி (எ) கில்லா (27). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது நண்பர் குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து கோபி மது அருந்தியுள்ளார். அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய கோபி தள்ளாடிக்கொண்டே கொடுங்கையூர் பகுதி வழியாக வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க;- இரண்டு திருமணத்தை மறைத்து 3வது திருமணம்.. 52 வயது பாஜக முக்கிய பிரமுகரை தட்டித்தூக்கிய போலீஸ்.!
அப்போது அங்கு கொடுங்கையூர் எழில் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ஜான்சன் (எ) கருப்பு (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா (55) ஆகிய இருவரும் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கோபியை பார்த்து பீடி உள்ளதா என சிவா கேட்டுள்ளார். அதற்கு போதையில் இருந்த கோபி யாரிடம் பீடி கேட்கிறாய் என சிவாவிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சிவா மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் சேர்ந்து கோபியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து கோபியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- ஃபாரினில் கணவர்! கஞ்சா போதை வந்து பேண்டை கழற்றி ஆபாசமாக நடக்கும் வாலிபர்! எஸ்.பி.யிடம் கதறும் இளம்பெண்.!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த ஜான்சன் மற்றும் சிவா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை மிரட்டல், அடிதடி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.