ஃபாரினில் கணவர்! கஞ்சா போதை வந்து பேண்டை கழற்றி ஆபாசமாக நடக்கும் வாலிபர்! எஸ்.பி.யிடம் கதறும் இளம்பெண்.!
திருமணமான இளம் பெண்ணிற்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் கை குழந்தையுடன் பெண் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் கூலி வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் தினமும் லாவண்யாவிற்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கோரி தற்போது கை குழந்தை மற்றும் பெற்றோருடன் மீண்டும் மனு அளித்துள்ளார்.
இதையும் படிங்க;- ப்ளீஸ் வேணாம் விட்டுடுங்க! நான் உங்க பொண்ணு மாதிரி! கதறியும் விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆப்பு.!
மேலும் கஞ்சா போதை ஆசாமி ஆடை கழட்டி ஆபாசமாக பொது வெளியில் நடந்துகொள்ளும் வீடியோ காட்சிகளும் பொதுமக்களும் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக போதை ஆசாமியை கைது செய்ய வேண்டு என்று லாவண்யா மீண்டும் புகாரை அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.