சென்னையில் வியாசர்பாடியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி அவரது வீட்டில் வைத்து பெற்றறோர் கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சென்னை வியாசர்பாடி முகமது இஸ்மாயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). இவர் பகுதி நேரமாகக் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் அவரது இடத்தில் அம்பேத்கர் தெருவில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அப்போது, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த சந்தோஷ்குமாரை தாக்க முயன்றனர். 

இதையும் படிங்க;- டிக் டாக் காதல்... லாட்ஜில் ரூம் போட்டு ஆசை தீர பலாத்காரம்... இளைஞரின் காமவெறியால் கர்ப்பமான பள்ளி மாணவி விபரீத முடிவு..!

இதனை கண்டதும் உயிர் பயத்தில் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினர். ஆனால், அந்த கும்பல் சந்தோஷ்குமாரை மட்டுமே குறிவைத்து விடாமல் துரத்தியது. இதனையடுத்து, அவர்களிடம் தப்பிக்க வீட்டிற்குள் சென்று பதுங்கிய சந்தோஷ்குமாரை வீடு புகுந்து சரமாரியாக கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. மகனின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் பார்த்த போது சந்தோஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்து கிடந்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த மர்ம கும்பலை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் வியாசர்பாடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.