சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. பாலிடெக்னிக் கல்லூரி மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து..!
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
சென்னை மேடவாக்கத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் 16 வயது கல்லூரி மாணவிக்கு சரமாரியாக கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
இதையும் படிங்க;- பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்.. அலறிய பெண்.. இறுதியில் நடந்தது என்ன?
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்றுள்ளார். தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் பெண்ணின் கை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணியை கழுத்தறுத்து படுகொலை செய்த கொழுந்தன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!
ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி குரோம்பேட்டை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வசந்த் என்ற இளைஞரை தேடிவருகின்றனர்.