திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஹோட்டல் அறையில் தனியாக  தங்கினால் என்ன தவறு இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது சமீபத்தில் உச்சநீதிமன்றம் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டால் அதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது .  கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் மூடப்பட்டது . 

அத்தனியார் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாகவும்.  மற்றொரு அறையில் மதுபானம் பாட்டில் இருந்ததாலும் இந்த ஹோட்டல் அறையில் போலீஸ் மருத்துவம் வருவாய்த் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு  மூடப்பட்டது .  இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார் .  இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ். ரமேஷ்  முன்பு விசாரணைக்கு வந்தது  ,  அப்போது பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் ஒட்டல் மூடப்பட்டுள்ளது . அதாவது இந்த ஓட்டலில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் தங்குவதால் மூடப்பட்டுள்ளது .  திருமணமாகாத ஆண் பெண் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் ஏதும் இல்லை. 

அதே போல திருமணம் ஆகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வது எந்தவிதக் குற்றமும் இல்லையோ அப்படி  ஆணும் பெண்ணும் ஒரே விடுதியில் ஒரு அறையில் தங்கினால் எவ்வாறு குற்றமாகும்  என கேள்வி எழுப்பினர். அதோடு அவர்களது அறையில்  மதுபாட்டில் கிடந்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறமுடியாது என தெரிவித்த நீதிபதி ,  இந்த ஓட்டலை மூடுவதற்கான எந்த நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்றும் , இந்த உத்தரவு காணக்கிடைத இரண்டு நாட்களுக்குள்  மாவட்ட ஆட்சியர் மீண்டும்  ஒட்டலை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .