ஐயோ என்ன கொல்ல வராங்க.. காப்பாத்துங்க! காப்பாத்துங்க! பொதுமக்கள் மத்தியில் ரவுடியை வெட்டி கூறுப்போட்ட கும்பல்
சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சந்தீப்குமார் (30). இவர் மீது அண்ணாநகர், அய்யப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் பிரபல ரவுடியை ஓடஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான சந்தீப்குமார் (30). இவர் மீது அண்ணாநகர், அய்யப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்த ரவுடி சந்தீப்குமார் நேற்று மாலை அண்ணாநகர் மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஒட்டியபடி வந்தார். அங்கு, உறவினர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சென்றதும்.. பல இடங்களில் கடித்துவைத்த மணமகன்.. அரைகுறை ஆடைகளுடன் புதுப்பெண் அலறல்.!
அப்போது, இருசக்கர வாகனங்களில் அரிவாள், பட்டாக்கத்தியுடன் வந்த மர்ம கும்பல் சந்தீப்குமாரை வெட்ட முயன்றது. இதனால் உயிர் பயத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடினார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தீப்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சந்தீப்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யா கொலை செய்யப்டபட்டார். இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான சந்தீப்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சந்தீப்குமார் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!