சென்னை மின்சார ரயிலில் கத்திகுத்து.. ரத்த வெள்ளத்திலும் பெண் காவலர் என்ன செய்தார் தெரியுமா?
சென்னையில் மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஆசிர்வாவை வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஆசிர்வாவை வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் மின்சார ரயில் புறப்பட்டது. அப்போது, ரயில் புறப்படும் நேரத்தில் பெண்கள் பெட்டியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர், இது பெண்கள் பெட்டி. இந்தப் பெட்டியில் பயணிக்கக்கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண் காவலர் ஆசிர்வாவை நெஞ்சுப்பகுதி, கழுத்துப்பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- உன் பொண்டாட்டி அருவியில் நிர்வாணமா குளிச்சா ஆம்பள புள்ள பொறக்கும்!மந்திரவாதி பேச்சை கேட்டு கணவர் செய்த காரியம்
ஆனாலும் கத்திகுத்து காயத்துடன் பெண் போலீஸ் ஆசிர்வா அவரை நடைமேடையில் விரட்டிச் சென்று பிடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த மர்ம போதை ஆசாமி தப்பி ஓடிவிட்டார். உடனே இது தொடர்பாக காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த பெண் காவலரை மீட்டு உடனடியாக பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- கோவையில் பயங்கரம்.. மென்ஸ் சலூனில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் வெந்துபோனது.!