சேலத்தில் காரில் சென்ற தொழிலதிபர், திடீரென கடத்தப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், தொழில்போட்டியா அல்லது வேறு காரணமாக என தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம். பள்ளி ஒன்றின் தாளாளராக உள்ளார். இவரது மகன் சுரேஷ் (36). பள்ளியின் பங்குதாரராக உள்ளார். மேலும் அதே பகுதயில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சுரேஷ்,, பள்ளியில் இருந்து வீட்டுக்கு காரில் புறப்பட்டார். மோட்டூர் பாலத்தில், சென்று கொண்டிருந்தபோது, திடீரென 5 பேர், அவரது காரை மறித்து நிறுத்தினர். திடீரென அவர்கள், சுரேஷை கடத்தி சென்றனர்.

புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதில், தொழில்போட்டி காரணமாக சுரேஷ் கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.