கும்மிடிபூண்டியைச் சேர்ந்தவர் செஞ்சி குமார். தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று மாணவி சென்ற ஷேர் ஆட்டோ பழுதாகி இருக்கிறது.

அப்போது அங்கு வந்த செஞ்சி குமார் மாணவியை பள்ளியில் விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்ததும் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி விட்டு மாணவியிடம் செஞ்சி குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சல் போட்டிருக்கிறார். எனினும் கத்தியை காட்டி மிரட்டி மாணவியை செஞ்சி குமார் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்த மாணவி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். செய்வதறியாது திகைத்த பெற்றோர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவலர்கள் செஞ்சி குமாரை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: ஜோதிடர் மனைவியுடன் ஆசை தீர உல்லாசம்..! ஆத்திரத்தில் தொழிலதிபரை அறுத்துக்கொன்ற கும்பல்..!