காலையில் திருமணத்தை வைத்துக்கொண்டு நள்ளிரவில் காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சின்னமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகள் பிரியங்கா (20). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி படித்து வருகிறார்.

இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (22) என்பவருக்கு காதல் மலர்ந்துள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் பிரியங்காவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

மனோஜ் குமார் சகோதர முறை என்பதால் பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே பிரியாங்காவுக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் முன்னெடுத்தனர். முல்லைவாடியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மகன் பிரகாஷ் (24) என்பவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடும் செய்திருந்தனர். 

நேற்று காலை பிரியங்கா - பிரகாஷ் ஆகியோரின் திருமணம் நடைறுவதாக இருந்தது.

நேற்று முன்தினம் நடைபெற்ற திருமணவரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைவரிடும் பரிசு பொருட்கள் வாங்கி சிரித்துப்பேசி மகிழ்ச்சியாக இருந்த பிரியங்கா, நள்ளிரவு மனோஜ்குமாருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மணமகள் பிரியங்கா மாயானதை அடுத்து, அவரது பெற்றோர், உற்றார் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பிரகாசுக்கு வேறொரு பெண்ணை, திருமணம் செய்து வைத்தனர்.