இரும்பு கம்பியால் ஒரே போடுபோட்ட காதலன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலி.. என்ன காரணம் தெரியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணன் பெண் கேட்க சினேகாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என சினேகா குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

boyfriend who killed his girlfriend who refused to talk in karaikudi

காரைக்குடி அருகே பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் காதலன் கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூர் வேல்முருகன் குடியிருப்பை சேர்ந்தவர் சினேகா (22). இவர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இலுப்பக்குடி புதுகுடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணன் பெண் கேட்க சினேகாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என சினேகா குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

இதையும் படிங்க;- குப்பையில் கை, சாக்கடையில் கால்,கிணற்றில் தலை! 70 ஆண்டுக்கு பிறகு ஆளவந்தார் மர்டரை நினைவுப்படுத்தும் கோவை கொலை

boyfriend who killed his girlfriend who refused to talk in karaikudi

அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் காதலி சினேகாவின் தாத்தாவை கண்ணன் கீழே தள்ளிவிட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சினேகாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனால், இரு குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கண்ணனிடம் அந்த காதலி சினேகா பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த கண்ணன் காதலியை கொல்ல திட்டமிட்டுள்ளார். 

boyfriend who killed his girlfriend who refused to talk in karaikudi

இந்நிலையில், நேற்று பிற்பகல் சினேகாவிற்கு போன் செய்த கண்ணன், அங்குள்ள ரேஷன் கடை அருகே வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து டூவீலரில் சினேகா ரேஷன் கடை அருகே வந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த கம்பியை எடுத்து சினேகாவின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிட்டார். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

boyfriend who killed his girlfriend who refused to talk in karaikudi

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சினோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கண்ணனை போலீசார்  தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  இரண்டு நைட்டுக்கு மட்டும் தான் உல்லாசம்.. 7வது திருமணம் செய்ய முயன்ற பெண் சிக்கிய எப்படி? பரபரப்பு தகவல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios