லாட்ஜில் உல்லாசமாக இருந்தபோது ஏற்பட்ட வாய்த்தகராறில், ரயில்வே பெண் ஊழியரை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பெரியமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பலருடன் பழகியதால் கொலை செய்ததாக கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பான பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில், பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் மோகனா என்பதும், ரயில்வேயில் பணியாற்றி வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக மோகனா தனது கணவருடன் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே கடலூரைச் சேர்ந்த வீராசாமி என்பவருடன் மோகானாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்குள் தகாத உறவு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக வீராசாமியும், மோகனாவும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், பெரியமேட்டில் விடுதி எடுத்து மோகானாவும், வீராசாமியும் தங்கியுள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த வீராசாமி, தான் கட்டியிருந்த வேட்டியால் மோகானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, மோகனாவின் புடவையை பயன்படுத்தி, தூக்கில் தொங்கவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.இவையனைத்தும் விசாரணையில் தெரியவர, போலீசார் வழக்குப் பதிவு செய்து வீராசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் அருகே வீராசாமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே திருவொற்றியூருக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த வீராசாமியை அதிரடியாக கைது செய்தனர்.

வீராசாமி அளித்த வாக்குமூலத்தில்; ரயில்வேயில் வேலை செய்து வந்த மோகனா, அதிகாலையே வேலைக்கு செல்வதால் காலை மற்றும் மதியம் எங்க கேண்டீனில் வந்து  சாப்பிடுவது வழக்கம். அப்போது அங்கு பணிபுரிந்த எனக்கும் மோகனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் , நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளில் நாங்கள் இருவரும் லாட்ஜில் அறை போட்டு உல்லாசமாக இருந்து வந்தோம். அதன்படி நேற்று முன்தினம் மதியம் இருவரும் ஆட்டோவில் வழக்கமாக செல்லும் மெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள தனியார் லாட்ஜிக்கு அறை எடுத்து தங்கி, உல்லாசமாக இருந்தோம். 

பின்னர், நான் மட்டும் லாட்ஜில் இருந்து வெளியே வந்து சரக்கு அருந்தினேன். மேலும், கஞ்சா அடித்துவிட்டு மீண்டும் லாட்ஜிக்கு சென்று மோகனாவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது மோகனாவுக்கு, என்னை போல் பலருடன் கள்ளக்காதல் இருந்ததை கேட்டேன். மது போதையில் இருந்த நான், மோகனாவிடம் உன் புருஷனுக்கு பண்ற துரோகம் செய்தது போல, எனக்கும் பன்றியா என்று கேட்டேன். அப்போது எங்களுக்குள் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகனா, நீ இதைப்பற்றி எல்லாம் கேட்க கூடாது, என்று அசிங்க அசிங்கமாக திட்டினாள், போதையில் இருந்த என்னை எட்டி உதைத்தாள். அப்போது எழுந்த நான், மோகனா கன்னத்தில் ஓங்கி அறைந்து, எனது 2 கைகளால் அவரது கழுத்தை இறுக்கினேன். பிறகு, சேலையால் மோகனா கழுத்தை இறுக்கி கட்டி, சரமாரியாக குத்தினேன்.

ஆனாலும், எனக்கு ஆத்திரம் தீரல அதனால், மோகனாவின் மர்ம உறுப்பில் கையால் கொடூரமாக குத்தி துடிதுடிக்க கொலை செய்தேன், பிறகு அவளை நிர்வாண படுத்தி சேலையால் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்க தொங்க விட்டுவிட்டு அறையை பூட்டிவிட்டு தப்பினேன் என இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.