திருவனந்தபுரத்தில் திருமண ஆசைக்காட்டி மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாடிபில்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (23). பாடிபில்டிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து பல்வேறு  இடங்களில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றார். கடந்த வருடம் கொல்லத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் கொல்லம் பட்டம் பெற்றார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெங்களூரில் எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. மாணவியை பல்வேறு  இடங்களுக்கு அழைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராகுல் ரூம்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடம் பணம் மற்றும் நகை ஆகியவற்றையும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் ராகுல் திடீரென கத்தார் சென்று விட்டார். அதன் பின்னர் தான் அவர் தன்னை ஏமாற்றியதை மாணவி உணர்ந்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் ராகுல் வர்க்கலா திரும்பி உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.