உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டிக்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலைச் சேர்ந்தவர் பாஜக தலைவர் அனுஜ் சவுத்ரி (34). உள்ளூர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், மொராதாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை அம்மாநில போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.
அனுஜ் சவுத்ரி மற்றொரு நபருடன் தனது அபார்ட்மெண்டிற்கு வெளியே நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை பலமுறை சுட்ட காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், மொராதாபாத்தின் பிரைட்ஸ்டார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், துப்பாக்கிக் குண்டுகள் உடலை துளைத்ததால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பழைய இரும்பு கடையில் புகுந்து திருட்டு; இந்து மக்கள் கட்சி செயலாளர் உள்பட 13 பேர் அதிரடி கைது
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பாலின் அஸ்மோலி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அனுஜ் சவுத்ரி போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அனுஜ் சவுத்ரி கொலைக்கு அரசியல் எதிரிகளே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அமித் சவுத்ரி மற்றும் அனிகேத் ஆகிய இருவரின் மீது சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். “இரு தரப்புக்கு இடையே தனிப்பட்ட பகை நிலவி வந்துள்ளது. நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என மொராதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.