செங்கல்பட்டு மாவட்டம் முல்லிவாக்கம் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சர்மா என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றும் பகுதியில் ராஜு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 16 வயது சிறுமி வசித்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் அவர் 11 ம் வகுப்பு படிக்கிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி மாலை மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்த ராம் சர்மா, ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக அருகே இருந்த முட்புதருக்குள் தூக்கிச்சென்றார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதில் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். அதற்குள்ளாக ராம் சர்மா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தை கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்புக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்து காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். வழக்கு பதியப்பட்டு தப்பியோடிய ராம் சர்மாவை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

'மாமா கேடு கெட்டவன்டி'..! சட்டையில்லாமல் தோன்றி தம்பிகளிடம் பகீர் கிளம்பிய சீமான் வீடியோ..!